Kathir News
Begin typing your search above and press return to search.

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முயற்சி ! கொந்தளித்த இந்து அமைப்பினர் !

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முயற்சி !  கொந்தளித்த இந்து அமைப்பினர் !

TamilVani BBy : TamilVani B

  |  7 Sep 2021 2:26 AM GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் மதமாற்றம் செய்ய முயற்சி செய்த மத போதகர் மீது இந்து அமைப்பினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் கிறித்துவ மத போதகர் ஒருவர் மக்களை மத மாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அங்கு இருந்த இந்து அமைப்பினர் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் அவர்களை கைது செய்ய சென்ற போது அவருடன் இருந்தவர்கள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர் அங்கு மீண்டும் இரு தரப்புக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது போன்ற மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Source: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News