Kathir News
Begin typing your search above and press return to search.

சத்தீஸ்கர்: பழங்குடி இளைஞனைத் தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கம்ரான் அன்சாரி மீது வழக்குப்பதிவு!

சத்தீஸ்கர்: பழங்குடி இளைஞனைத் தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கம்ரான் அன்சாரி மீது வழக்குப்பதிவு!

சத்தீஸ்கர்: பழங்குடி இளைஞனைத் தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கம்ரான் அன்சாரி மீது வழக்குப்பதிவு!

Saffron MomBy : Saffron Mom

  |  12 Jan 2021 5:19 PM GMT

ஜனவரி 10 இல் ராய்ப்பூரில் ராஜா தளப் பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கியதற்காகக் காங்கிரஸ் கவுன்சிலர் கம்ரான் அன்சாரி மீது ராய்ப்பூர் காவல்துறை திங்களன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. கவுன்சிலர் மீது சட்டப்படி நடவடிக்கையானது அந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலான பிறகு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்துள்ளது, ஆனால் வீடியோ திங்களன்று வைரலாகி உள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரின் பேரில், லால் பகதூர் சாஸ்திரி வார்டில் இருக்கும் கார்போரேட்டர் அன்சாரி மற்றும் அவரது சகோதரர் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் பா.ஜ.க தலைவரும் மற்றும் ராஜ்ய சபா MP ஆன ராம்விச்சர் நேட்டமும் சமூக வலைத்தளத்திற்குக் கொண்டு சென்றார்.

அந்த வீடியோவில், காங்கிரஸ் கவுன்சிலரும் மற்றும் அவர் கூட்டாளிகளும் அந்த இளைஞனை எத்தி குத்துவதைக் காண முடிந்தது. மேலும் அவர்கள் கட்டையால் அவனைத் தாக்கினர். மேலும் அந்த உதவியற்ற தாய் ஜெய் மந்தவி தனது மகனைக் காப்பாற்ற முயன்ற போதும் தனது முயற்சியில் தோல்வியடைந்தார். இந்த சம்பவமானது மக்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.

ஜெய் மந்தவி புகாரில், தான் தன் மகனுடன் கார்போரேட்டர் அலுவலகத்துக்குத் தொழிலாளர் வேலை அட்டை வாங்கச் சென்றதாகக் கூறியுள்ளார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் அங்கிருந்து ஓடிச்சென்ற பிறகு இன்னும் வீடு-திரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் குற்றவாளி மேல் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கவன்சிலரும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு அன்சாரி தனது வீட்டிற்கு வந்து அச்சுறுத்திச் சென்றதாகப் பாதிக்கப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் காங்கிரஸ் கவுன்சிலர் இளைஞர் மீது குற்றச் சாட்டை முன்வைத்து அவர்கள் மேல் ஏற்கனவே வழக்கு இருக்கின்றது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.க உறுப்பினர்கள் காவல் நிலையத்துக்கு முன் வந்து குற்றவாளியான காங்கிரஸ் கவுன்சிலர் மீது நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News