Begin typing your search above and press return to search.
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: பரிசோதனைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

By : Thangavelu

இந்நிலையில், இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்வதற்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி கொடுத்துள்ளது.
தற்போது 2ம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவெக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
Next Story