தைவான்- சீனாவிற்கும் இடையே போர்: சீனா விடுத்த புதிய மிரட்டல்.... எல்லையில் பதற்றம்!
தைவானை மிரட்டும் விதமாக சீனா தன்னுடைய பல்வேறு போர் விமானங்களை அனுப்பி இருக்கிறது.
By : Bharathi Latha
அமெரிக்கா தற்போது தனக்கு எதிரி நாடான தைவானுக்கு மிக அதிகமான உதவிகளை செய்து வருகிறது என்று சீனா குற்றம் சாட்டி இருக்கிறது. குறிப்பாக தைவானை மிரட்டும் விதமாக சீனா தனது போர் விமானங்களை மற்றும் கப்பல்களை அனுப்பியதால் இரண்டு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் இருக்கிறது.பல கூட்டங்களை உள்ளடக்கிய ஒரு சிறு நாடு தான் தைவான். 1949 ஆம் ஆண்டு இது தனி நாடாக இருந்து வருகிறது. ஆனால் தைவாளை தனது மாகாணங்களில் ஒன்றாக கருதும் சீனா, தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு பெருமளவில் முயற்சிகளை செய்து வருகிறது, ஆனால் இதற்கு தைவான் முற்றிலும் மறுப்பு தெரிவிக்கிறது.
ஆனால் தைவனை தனது மாகாணத்தில் எப்படியாவது ஆக்கிரமிக்க வேண்டும் என்று பல்வேறு ராணுவ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.இந்த ஒரு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் என்று அபாயம் இருப்பதாக சீனா உணர்ந்து இருக்கிறது. எனவே இதன் காரணமாக தைவனுடன் சீனாவின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சீனாவின் எதிர்ப்பை முறையாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் தைவான் அதிபர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனால் மேலும் கோபம் அடைந்த சீனா சில மணி நேரங்களில் தைவானை சுற்றி வளைத்து தன்னுடைய போர்க்கப்பல் மற்றும் விமானங்களிடம் பயிற்சிகளை தொடங்கியது.
எனவே போர் பயிற்சி தொடங்கும் என்று தெரிவித்தார். முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாளில் மட்டும் சீனா 71 போரில் விமானங்களையும் ஒன்பது போர் கப்பல்களையும் தைவானை நோக்கி அனுப்பியது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையே போரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Input & Image courtesy: News