இந்தியா மீதான சீனாவின் பொறாமை எண்ணங்களே எல்லைப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம்: அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்.!
இந்தியா மீதான சீனாவின் பொறாமை எண்ணங்களே எல்லைப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம்: அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்.!

By : Rama Subbaiah
சுயசார்பு பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் உள்நாட்டு தன்னிறைவு உற்பத்திக்கான நடவடிக்கைகள் காரணமாக தனது இறக்குமதிகளை குறைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு சின்னஞ்சிறிய பிளேடுகள், பொம்மைகள் முதல் தொழிற்சாலை கட்டுமானங்கள் வரை கடந்த 20 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வந்த சீனாவுக்கு கடந்த ஓராண்டு காலமாகவே படிப்படியாக வாய்ப்புகள் குறைந்து வந்தன.
தற்போது கொரோனா சூழ்நிலையிலும், எல்லை பதற்றங்களாலும் இந்தியர்கள் சீன பொருள்களை பகிஷ்கரிப்பு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை உலக நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக 70 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் இந்தியாவின் சுய சார்பான வளர்ச்சி சீனாவுக்கு பிடிக்கவில்லை என்றும், தனது பொருளாதார பிடியில் எப்போதும் இந்தியாவை வைத்திருக்க அது விரும்புவதாகவும் ஆனால் இந்தியாவின் போக்கு அந்நாட்டுக்கு சாதகமாக இல்லாததால்தான் சீனா ஆத்திரம் அடைந்து இந்திய எல்லைகளில் தேவையற்ற பிரச்சனைகளை பிரச்சனைகளை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தியா சீனாவுக்கு நிகரான ராணுவ பலம் மிக்க நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வது, மற்றும் அந்த நாடுகளிடமிருந்து நவீன ராணுவ தொழில் நுட்பங்களை அடைவது, ரபேல் போன்ற அதி நவீன விமானங்கள், ஏவுகணைகள் வாங்குவது சீனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அது எப்போதும் இந்தியாவை மறைமுகமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றியடைந்தது. ஆனால் இப்போது முடியவில்லை. இந் நிலையில்தான் இந்தியா மேற்கண்ட நாடுகளுடன் வைத்துள்ள கூட்டணியை முறியடிக்க துடிக்கிறது என்றும் கூறியுள்ளது.
ஆசியான் எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் உள்ள நாடுகள் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு, இறையாண்மை, பொருளாதார வாய்ப்புகள் குறித்து சீனா கவலைப்படவில்லை.
அது எப்போதும் தனது வாய்ப்புகள் குறித்தே சுயநலத்துடன் சிந்திக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசியான் ஒப்பந்ந்தத்தில் இருந்து இந்தியா பின்வாங்கியது சீனாவின் ஏற்றுமதி வாய்ப்புகளை குறைத்துள்ளதாக அந்நாடு நினைக்கிறது.
மேலும் சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவையும் தாண்டி முதலிடம் வகிக்க சீனா தீவிரமாக உள்ளது. தன்னை சக்திவாய்ந்த நாடாக அங்கீகரிக்க செய்வதற்காக, பல உலக நாடுகளை அது மறை முகமாக மிரட்டி வருவதாகவும், தான் எதிரியாக கருதும் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளான, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா, தைவான் ஆகியவற்றை சீனா குறிவைத்து உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முயற்சிக்கு, அந்த நாட்டு ராணுவம் பயன்படுத்தப்படுவதக்கவும், இந்தியா, தைவான் என, பல நாடுகளுடன் எல்லைப் பிரச்னையில் சீனா அராஜக குணத்துடன் செயல்பட, மேற்கண்ட காரணங்கள்தான் எனவும் கூறப்பட்டுள்ளது.
