கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவ மிஷனரி குழந்தைகள் காப்பகம் - 10 பேர் மீது பாய்ந்த வழக்கு
மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் கட்டாய மதமாற்றம் நடக்கிறது என வந்த புகாரை தொடர்ந்து 10 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
By : Mohan Raj
மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் கட்டாய மதமாற்றம் நடக்கிறது என வந்த புகாரை தொடர்ந்து 10 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான ஆலயத்தின் தலைவர் பிரியங்கா கனுங்கோ நேற்று முன்தினம் திடீர் ஆய்வுக்காக சென்றார்.
அவரது வருகை பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் ஆய்வு செய்தார், மேலும் அங்கு கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகத்தில் மதமாற்றம் நடந்துள்ளது என பிரியங்கா கனுங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த இல்லத்தில் வளர்க்கப்படும் ஒரு குழந்தையை சாமியாராக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து கர்தினி பைபாஸ் சாலையில் அமைந்த கிறிஸ்துவ மிஷனரிகளின் குழந்தைகள் விடுதிக்கு சென்ற பொழுது நீண்ட நேரம் வாசலில் காக்க வைக்கப்பட்டு கதவை திறக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மிஷனரியின் 10 பேரும் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.