அயோத்தி 'ராம் லீலா' நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கியுள்ள தூர்தர்சன்.!
அயோத்தி 'ராம் லீலா' நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கியுள்ள தூர்தர்சன்.!

By : Kathir Webdesk
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தில் நடைபெற உள்ள கடவுள் ராமரின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் நாடக நிகழ்ச்சியான 'ராம் லீலாவை' தேசிய ஒளிபரப்பு தொலைக்காட்சியான தூர்தர்சன் நேரடி ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளதாக உத்தரப் பிரதேச தகவல் துறை தெரிவித்துள்ளது.
ராமரின் வாழ்க்கை நிகழ்ச்சியை எடுத்துக்கூறும் நாடக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஏற்பாடு உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை செய்துள்ளது. இதனை உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் நீல்காந் திவாரி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் MP பிரவேஷ் சாஹிப் சிங் வர்மா முதலியோர் இதனைத் தொடங்கிவைத்தனர்.
நவராத்திரி கொண்டாட்டத்தின் தொடக்க நாளில் இருந்து ராம் லீலா நிகழ்வு தொடங்கப்பட்டது. இது அக்டோபர் 17 முதல் அக்டோபர் 25 வரை இந்த ஒன்பது நாட்களும் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் தூர்தர்சன் தொலைக்காட்சியிலும் மற்றும் இணையச் செயலியான யூ டூப்பிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. ராம் லீலா நிகழ்வு இந்த ஒன்பது நாட்களிலும் DD நேஷனல் மற்றும் யூ டூப்பில் மாலை ஏழு (7PM ) மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை கொரோனா தொற்றுநோயால் நேரடியாகக் கண்டுகளிக்க முடியாத பக்தர்களுக்கு இது சிறந்த மாற்று வாய்ப்பாக இருக்கின்றது.
