Kathir News
Begin typing your search above and press return to search.

பண்டிகை காலத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி உரை!

பண்டிகை காலத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி உரை!

பண்டிகை காலத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி உரை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2020 1:04 PM IST

கொரோனா தொற்று நோய் குறித்து செவ்வாய்க்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நேரங்களில் கவனக் குறைவாக இருந்துவிடக் கூடாது மேலும் கொரோனா தொற்றுநோய் இன்னும் நம்மை விட்டுச் செல்லவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கொரோனா தொற்று நோய் பரவ தொடங்கிய காலகட்டத்திலிருந்து தனது ஏழாவது உரையை நாட்டுமக்களுக்கு வழங்கினார். நிறையா மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் பல வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று மோடி தெரிவித்தார். மேலும், "இது நல்ல செயல் இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

"இவ்வாறு கவனக்குறைவுடனும் அலட்சியமாகவும் முகக்கவசங்கள் அணியாமல் வெளியிடங்களில் நடமாடுவதன் மூலம், நீங்கள் உங்களை, உங்கள் குழந்தைகளை மற்றும் பெரியோர்களின் ஆபத்தில் வைகின்றீர்கள்," என்று பிரதமர் கூறினார். "ஊரடங்குகள் நிறைவடைந்தாலும் வைரஸ் தொற்றுநோய் நம்மைச் சுற்றி இருக்கின்றது என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்," என்றும் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தொற்றுநோய் எண்ணிக்கைகள் குறைந்து தற்போது அந்த எண்ணிக்கைகள் அங்கு அதிகரித்து வருகின்றது என்பதையும் அவர் குறிப்பிட்டார். தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் வரை நாம் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசிகள் கண்டுபிடித்தவுடன் இந்திய நாட்டுமக்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதிசெய்யும் முயற்சியில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது என்று பிரதமர் மோடி கூறினார். "தொற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் வரை விழிப்புணர்வுடன் இருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்," பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News