Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரை சீன பகுதியாக காட்டும் ட்விட்டர் - வெடிக்கும் சர்ச்சை.!

காஷ்மீரை சீன பகுதியாக காட்டும் ட்விட்டர் - வெடிக்கும் சர்ச்சை.!

காஷ்மீரை சீன பகுதியாக காட்டும் ட்விட்டர் - வெடிக்கும் சர்ச்சை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2020 5:21 PM IST

உலகம் முழுவதும் குறும் செய்திகளை வழங்கி வருகிறது ட்விட்டர் நிறுவனம். உலகம் முழுவதும் 32 கோடி பயனீட்டாளர்கள் உள்ளனர். சமூக விசயங்களை பற்றி மக்கள் ட்விட்டரில் விவாதிப்பதால் அடிக்கடி சர்ச்சைகள் உண்டாக்கும்.


ட்விட்டரில் பல வசதிகள் உள்ளது. ட்ரெண்ட், டேக், ஜியோடேக் போன்றவை மிக பிரபலம். ட்விட்டரின் ட்ரெண்டை பார்த்தல் தற்போது அதிகம் பேசப்படக்கூடிய விசயத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தான் பதிவு செய்வர். அதிலிருந்து மற்ற செய்தி ஊடகங்கள் செய்திகளை சேகரித்து அளிக்கும்.


ட்விட்டர் நிறுவனத்தின் ஜியோடேக் பதிவு வரைப்படத்தில் காஷ்மீர், சீனப்பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் கோகலே ட்விட்டரில் உள்ள தவறைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார். ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர், இது தொழில்நுட்ப தவறால் ஏற்பட்டது என்றும் விரைந்து சரி செய்வதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து, சில மணி நேரங்களில் வரைபடம் திருத்தி அமைக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News