Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் தேன், காளான் இணைக்க மத்திய அரசு பரிந்துரை.!

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் தேன், காளான் இணைக்க மத்திய அரசு பரிந்துரை.!

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் தேன், காளான் இணைக்க மத்திய அரசு பரிந்துரை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2020 6:38 PM IST

வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் சிறு வயதிலேயே வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரால் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் இலவச மதிய உணவு திட்டம்.


1980 களின் மத்தியில் தமிழ்நாடு, கேரளம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அந்தந்த அரசுகள் தமது நிதியைக் கொண்டே செயல்படுத்தி வந்தன. 1990-91 ஆம் ஆண்டு வாக்கில், மாநிலங்களின் நிதி ஆதாரத்தைக் கொண்டே மதிய உணவு வழங்கும் திட்டம் 12 மாநிலங்களில் அமலில் இருந்தது.

தொடக்கக்கல்வி ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் தேசிய திட்டம் (NP-NSPE) 1995 ஆம் ஆண்டு 15 ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டமாகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த 2408 ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1997-98 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் எல்லா ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பல உணவு வகைகள் இந்த திட்டத்தில் அறிமுக படுத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தளர்வுகள் தளர்த்திய பின்னர் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அது போன்று பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மதிய உணவு வேளையில், காளான், தேன் ஆகியவற்றை கொடுப்பதற்கான சுற்றரிக்கையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. காளான், தேன் ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் காரணமாகவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News