Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று முதல் பெண்கள் ரயிலில் பயணிக்கலாம் - ரயில்வே அமைச்சர் தகவல்.!

இன்று முதல் பெண்கள் ரயிலில் பயணிக்கலாம் - ரயில்வே அமைச்சர் தகவல்.!

இன்று முதல் பெண்கள் ரயிலில் பயணிக்கலாம் - ரயில்வே அமைச்சர் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2020 9:05 PM IST

மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உள்ளூர் ரயில்களில் இன்று முதல் அனைத்து பெண் பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப் படுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். தற்போது, ​​மகாராஷ்டிரா அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு முன்னணி கடமைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே இயக்கப்படும் உள்ளூர் ரயில்களில் QR கோட் மூலம் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.



மகாராஷ்டிரா அரசு அக்டோபர் 16 ம் தேதி உள்ளூர் ரயில்களில் அதிக நேரம் இல்லாத நேரங்களில் அதாவது காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், பிறகு இரவு 7 மணி வரை பெண்கள் பயணிக்க அனுமதிக்கும்படி பல தரப்புகளில் இருந்து ரயில்வே கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை, மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில்,"ரயில்வே அதிகாரிகளிடம் அதன் கோரிக்கையை "விரைவாக" பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்".



பின்னர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகையில், "அக்டோபர் 21 முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 7 மணிக்குப் பிறகு பெண்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க ரயில்வே அனுமதிக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் எப்போதும் தயாராக இருந்தோம். தற்போது அரசிடமிருந்து கடிதத்தைப் பெற்றோம். மகாராஷ்டிரா அரசு, இந்த பெண்கள் பயணத்தை நாங்கள் அனுமதித்துள்ளோம். மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே ஆகியவை தங்களது புறநகர் வலையமைப்பில் ஒவ்வொரு நாளும் 700 உள்ளூர் ரயில் சேவைகளை கூட்டாக இயக்கி வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News