காவல்துறையினரை கௌரவப்படுத்தும் யோகி அரசு.!
காவல்துறையினரை கௌரவப்படுத்தும் யோகி அரசு.!

By : Kathir Webdesk
அக்டோபர் 21 இன்று காவல்துறையினரின் சேவைகளை நினைவுகூறும் நாளை முன்னிட்டு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் குற்றவாளிகளைத் தடுக்க தைரியத்துடன் செயல்பட்டு தங்களின் உயிர்களைத் தியாகம் செய்த காவல் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தேசத்திற்கு தங்கள் சேவைகளைச் செலுத்தி வரும் காவல்துறையினரைக் கௌரவப் படுத்துவதற்காகப் புதன்கிழமை அன்று நடைபெற்ற பேரணியில் உத்தரப் பிரதேச முதல்வர் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், "குற்றவாளிகளும் அவர்கள் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளும் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் விளைவாக மார்ச் 20 மற்றும் அக்டோபர் 5 2020 இல் காவல்துறை நடத்திய என்கவுண்டரில் 125 பயங்கர குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்," என்று அவர் தெரிவித்தார். மேலும் இது போன்ற துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 2,607 குற்றவாளிகள் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
"தங்கள் தாய்நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த காவல்துறையினரை நினைவு கூறுவதற்கான நாள் இந்த காவல்துறையினரை நினைவுகூறும் தினம்," என்று முதல்வர் யோகி ட்விட் செய்திருந்தார். மேலும் தங்கள் கடைமைகளைச் செய்துவரும் காவல்துறையினருக்கு நன்றியையும் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 இல் நாட்டிற்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் காவல்துறையினரை நினைவுகூறும் தினம் கொண்டாடப் படுகின்றது. 1959 அக்டோபர் 21 பின்னணியில் இந்த நாள் நினைவூட்டப் படுகின்றது. அன்று 20 இந்திய இராணுவ வீரர்கள் சீன இராணுவத்திடம் உயிர்த் தியாகம் செய்தனர். அதில் 10 காவல்துறையினர் கொல்லப்பட்டனர், 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உயிரிழந்த காவல்துறையின் உடல்கள் ஒரு மாதத்திற்குப் பிறகு நவம்பர் 28 1959 இல் சீன இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்டது. 1947 இல் இருந்து இதுவரை மொத்தம் 34,844 காவல்துறையினர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தேசிய காவல்துறை நினைவுச் சின்னத்தை அடிகள் நாட்டினர். அந்த நினைவுச் சின்னத்தில் அருங்காட்சியகம், வீரத்தைக் குறிக்கும் சுவர் மற்றும் பிளாக் கிரானைட் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. அது டெல்லியில் சாணக்யபுரியில் 6.12 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
