Kathir News
Begin typing your search above and press return to search.

உலகமே திரும்பி பார்க்கும் சாதனைகள் : ஸ்வச் பாரத் மிஷன் - சிறப்பு பார்வை.!

உலகமே திரும்பி பார்க்கும் சாதனைகள் : ஸ்வச் பாரத் மிஷன் - சிறப்பு பார்வை.!

உலகமே திரும்பி பார்க்கும் சாதனைகள் : ஸ்வச் பாரத் மிஷன் - சிறப்பு பார்வை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2020 8:34 PM IST

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அக்டோபர் 2, 2014 அன்று ஸ்வச் பாரத் மிஷனைத் தொடங்கினார். அதே நேரத்தில் 2019 அக்டோபருக்குள் இந்தியாவில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல இந்த ஸ்வச் பாரத் மிஷன் 2019, அக்டோபர் 2 ஆம் தேதி 100% இலக்கை எட்டியது.

பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாக இது அமைந்துள்ளது. 38.7 சதவீதத்திலிருந்து தொடங்கப்பட்ட இந்த மெஷின் 2019 அன்று 100 சதவீதத்தை எட்டியது. இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டதிலிருந்து 10 கோடிக்கும் அதிகமான இலவச வீட்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு பட்டுள்ளன.



அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் மிஷன் மூலம் தற்போது கிராமப்புற இந்தியாவில் ஒரு வீட்டிற்கு ரூ .53,000 மதிப்பீடுக்கும் அதிகமான நன்மைகளை அளித்துள்ளது என்று எல்சேவியரின் சயின்ஸ் டைரக்ட் ஜர்னலின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதில் சராசரியாக ஒரு மனிதனுடைய வயிற்றுப்போக்கு குறைதல், சுகாதார அணுகல் நேர சேமிப்பு, வயிற்று சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் செலவழிக்கப்படும் மருத்துவச்செலவு ஆனது குறிக்கப் பட்டிருக்கிறது என்று ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.



ஸ்வச் பாரத் மிஷன் (கிளீன் இந்தியா மிஷன்) பற்றிய ஆய்வில், 10 ஆண்டுகளுக்கும் மேலான வீட்டு செலவினங்களுக்கான நிதி வருவாய் 1.7 மடங்கு செலவாகும். இந்த திட்டத்தின் முதல் பொருளாதார பகுப்பாய்வாகவும், உலகளாவிய தகவல் பகுப்பாய்வு நிறுவனமான எல்சேவியரின் சயின்ஸ் டைரக்ட் ஜர்னலின் சமீபத்திய அக்டோபர் 2020 இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், ஏழைகளுக்கு 2.6 நிதி வருவாய் கிடைத்துள்ளது என்பதையும் காட்டுகிறது. சமூக வருமானம் 5.7 மடங்கு இருந்துள்ளது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 69.5 சதவீதம் குடும்பங்கள் சராசரியாக ரூ. 13,000 ரூபாய்க்கு மேல் ஆதரவுடன் அரசாங்க மானியத்தைப் பெற்றன என்றும், இந்த வீடுகளில் 63.8 சதவீதம் பேர் அரசாங்க மானியத்திற்கு கூடுதலாக தங்கள் சொந்த முதலீட்டைச் செய்தார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஆந்திரா மற்றும் அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2017 ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை 10,051 கிராமப்புற குடும்பங்களை இந்த ஸ்வச் பாரத் மெஷின் மூலம் கணக்கெடுப்பு நடத்தி, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததை உறுதி செய்து 90 சதவீதம் கழிப்பறைகளை அரசாங்கம் இலவசமாக கட்டித் தந்துள்ளது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News