Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானின் சிறிய ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.!

பாகிஸ்தானின் சிறிய ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.!

பாகிஸ்தானின் சிறிய ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Oct 2020 9:46 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் குவாட்காப்டர் எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இந்திய ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த குவாட்காப்டரை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் கேரான் எல்லைப் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ குவாட்காப்டரை சுட்டு வீழ்த்தினர். சீன நிறுவனமான டி.ஜே.ஐ மேவிக் தயாரித்த இந்த குவாட்கோப்டர் இங்கு இந்தியாவிற்கு சொந்தமான பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது, "என்று ராணுவ அதிகாரி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் தனது சிறப்புப் படையினர் மூலம் எல்லைக் பாதுகாப்பு படையினரின் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு எதிராக இந்திய இராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. இது தொடர்பாக பேசிய இந்திய ராணுவத்தின் ஜெனரல் மனோஜ் முகுந்த் கூறுகையில் பாகிஸ்தான் தனது தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அனைத்து முயற்சிகளும் இந்திய ராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் மூலம் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
எல்லையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகின்றது. இந்த பனிப்பொழிவு காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கும் எல்லைப் பகுதிகளை அனைத்தையும் பனி மூடுவதற்கு முன்பாக எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்துவிட வேண்டும் என்று தீவிரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News