Kathir News
Begin typing your search above and press return to search.

மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் எல்லை காக்கும் வீரர்களுக்கு விளக்கேற்றுங்கள்- பிரதமர் பேச்சு.!

மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் எல்லை காக்கும் வீரர்களுக்கு விளக்கேற்றுங்கள்- பிரதமர் பேச்சு.!

மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் எல்லை காக்கும் வீரர்களுக்கு விளக்கேற்றுங்கள்- பிரதமர் பேச்சு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2020 5:38 PM GMT

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதைத் தொடர்ந்து அக்டோபர் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கீழ்க்கண்டவாறு பேசுகிறார். எல்லையில் துணிச்சலுடன் காவல் காக்கும் வீரர்களை இந்த பண்டிகை காலத்தை நினைத்து பார்க்கவேண்டும் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்.


பண்டிகை காலங்களில் இராணுவ வீரர்கள் எல்லையில் இருந்தாலும், ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் இருக்கிறது, பிரார்த்தனை செய்கிறது என்று அவர்களுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும். அதற்காக நம் ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் பண்டிகை காலத்தில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும்.



மேலும் நாடு முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடி வருகிறோம். இந்த புனிதமான நாளில் மக்களுக்கு என்னுடைய சார்பில் தசரா பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமையை நன்மை வென்றதும், பொய்மையை உண்மை வென்றதையும் தெரிவிப்பதுதான் தசரா விழா. பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்களுக்கு மத்தியில் நாம் பொறுமையாக இருந்தால் தான் வெற்றிகளை பெற முடியும் என்பதை தசரா பண்டிகை கூறுகிறது. இப்பொழுது அனைத்து மக்களும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்கள். மிக எளிமையான பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி என்று குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா விழிப்புணர்வு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். பண்டிகை காலங்களில் புதிய பொருட்கள் மக்கள் உற்சாகமாக வாங்குவார்கள். இந்த முறை கடைக்குச் செல்லும் பொழுது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வாங்க வேண்டும். நம் காதி பொருட்கள் உலக அளவில் பிரசித்தி பெற்று இருக்கின்றன. இந்த கொரோனா பரவல் காலத்தில் காதியில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News