Kathir News
Begin typing your search above and press return to search.

பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்தடைந்த மைக் பாம்பியோ மற்றும் மார்க் எஸ்பெர்.!

பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்தடைந்த மைக் பாம்பியோ மற்றும் மார்க் எஸ்பெர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2020 1:47 AM IST

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அன்று இருநாடுகளுக்கு இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளிஉறவுதுறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெர் இருவரும் திங்கட்கிழமை மதியம் டெல்லி வந்தடைந்தனர்.


இந்த மூன்றாவது அமெரிக்க-இந்திய நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் இடையேயுள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆட்டுத்திறன் குறித்தும் உயர்மட்ட உறுதிப்பாட்டை உறுதிசெய்ய உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

இந்திய புறப்படுவதற்கு முன்பு, நட்பு நாடுகளுடன் இணைய வாய்ப்பு கிடைத்தது குறித்து நன்றி தெரிவிப்பதாக பாம்பியோ ட்விட் செய்திருந்தார். "இந்தியா, ஸ்ரீலங்கா, மால்தீவ்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் எனது பயணங்கள் உள்ளன. வலுவான மற்றும் வளமான நாடுகளை உள்ளடக்கிய எங்கள் நட்புநாடுகளுடன் இணைய வாய்ப்பு கிடைத்தற்கு நன்றி," என்று அவர் ட்விட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த மூன்றாவது நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவுமுறைகள் குறித்து மற்றும் சுதந்திர இந்தோ-பசிபிக் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், இருநாடுகளுக்கு இடையே உள்ள இராணுவ தொடர்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வாரம் கூறியிருந்தது.

முதல் இரண்டு நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளும் 2018 செப்டம்பரில் டெல்லியிலும் மற்றும் 2019 இல் வாசிங்டன் DC வில் நடைபெற்றது.

இரண்டு நாள் பயணத்தின் போது, பாம்பியோ மற்றும் மார்க் எஸ்பெர் இந்தியாவில் S ஜெய் சங்கர் மற்றும் ராஜ்நாத்சிங், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்டோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும் இந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் பல்வேறு முக்கிய சந்திப்புகள் இணையவழியில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பாம்பியோ மற்றும் மார்க் எஸ்பெர் நேரில் சந்திப்பதன் முக்கியத்துவத்தை இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய நாட்டுடனான உறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News