டெல்லி கலவரம்: குற்றம்சாட்டப்பட்ட ஆசிப் இக்பால் ஜாமின் மனு ரத்து!
டெல்லி கலவரம்: குற்றம்சாட்டப்பட்ட ஆசிப் இக்பால் ஜாமின் மனு ரத்து!

By : Kathir Webdesk
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் கலவரக்காரர்கள் வன்முறைகளைத் தூண்டினர். கலவரத்தைத் தூண்டிய வழக்கில் ஜமியா மிலியா இஸ்லாமிய மாணவன் ஆசிப் இக்பால் தன்ஹா UAPA கீழ் கைது செய்யப்பட்டான். ஆசிப் இக்பால் தன்ஹா தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது.
மனுதாரரின் வக்கீல் ஆசிப் இக்பால் தன்ஹா சட்டவிரோத செயல்பாடு தடுப்பு சட்டத்தின் கீழ் எந்த ஒரு குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் அரசு தரப்பு வக்கீல் UAPA கீழ் குற்றங்கள் பொருந்துகின்றன மற்றும் அவருக்கு எதிரான முக்கிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் அவரது மனுவை ரத்து செய்து, தன்ஹாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொருந்துகின்றன மற்றும் அதனை நம்புவதற்குரிய காரணங்கள் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தன்ஹாவின் வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால் தன்ஹா கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறும் மூன்று வாக்குமூலங்களும் உண்மையல்ல என்று குறிப்பிட்டார். இதற்கு நீதிமன்றம், அந்த அறிக்கைகள் முகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றின் உண்மைத் தன்மை பின்னர் கண்டறியப்படும் என்று தெரிவித்தது.
கலவரம் தொடர்பான வழக்கில் செப்டம்பர் 16 இல் இந்தியத் தண்டனை சட்டம், பொதுச் சொத்துக்களைச் சேதம் செய்தது மற்றும் UAPA கீழ் டெல்லி காவல்துறை 15 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கலவரத்தில் கட்டுப்பாட்டை மீறி 53 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 748 பேர் காயமடைந்ததாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
