Kathir News
Begin typing your search above and press return to search.

பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் செல்கிறார்.!

பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் செல்கிறார்.!

பல்வேறு  திட்டங்களைத் தொடங்கிவைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் செல்கிறார்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 5:42 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் பயணமாக வெள்ளிக்கிழமை அன்று குஜராத்துக்கு வருகை தர உள்ளார். குஜராத்தைப் பார்வை இடும் போது கெவாடியா மற்றும் அகமதாபாத் இடையேயான சீப்ளேன் சேவை உட்படப் பல திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

பிரதமர் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகை தந்த பிறகு காந்தி நகரில் இருக்கும் முன்னாள் குஜராத் முதலமைச்சர் கேஷுபாய் படேல் குடும்பத்தினரினை சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க வின் முக்கிய பிரமுகர் ஆன அவர் வியாழக்கிழமை அன்று நோய் காரணமாகக் காலமானார். அந்த பின்னர் பிரதமர் அங்கிருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாக்கு புறப்பட உள்ளார். மேலும் கொரோனா தொற்றுநோய் பரவல் தொடங்கிய பின்பு அவரது சொந்த மாநிலத்திற்குப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

அதிகாரிகளின் அறிக்கைப்படி, பிரதமர் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கெவாடியா சென்றடைய ஹெலிகாப்டர் மூலம் செல்லவுள்ளார் என்று கூறப்படுகின்றது. முதலில் பிரதமர் மோடி சர்தர் வல்லபாய் படேல் நினைவாகக் கொண்டுவரப்பட்ட சர்தர் வல்லபாய் படேல் விலங்கியல் பூங்காவைத் திறந்து வைக்க உள்ளார்.

அதன் பின்னர் சிலைக்கும் மற்றும் ஸ்ரேஷ்த் பாரத் பவனுக்கும் இடையே நர்மதா ஆற்றில் படகு சேவையைத் திறந்து வைக்கவுள்ளார். சேவையைத் திறந்து வைத்த பின்னர் பிரதமர் படகு சவாரி செல்லவுள்ளார் என்று எதிர்ப்பாக்கப் படுகின்றது. நாட்டில் அனைத்து இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் கைவினை பொருட்களை அனைத்து சுற்றுலாப் பயணிகளும் வாங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சிலைக்கு அருகில் இருக்கும் ஏக்தா மால்லை திறந்து வைக்கவுள்ளார்.

பின்னர் அக்டோபர் 31 இல் சர்தர் வல்லபாய் படேல் பிறந்தநாள் நினைவாக ஒற்றுமையின் சின்னமான சிலைக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். அந்த விழாவில், மத்திய ஆயுத காவல் படைகள்(CAPF) மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து ஏக்தா திவாஸ் பரேட் என்ற அணிவகுப்பு நடக்கவுள்ளது. அணிவகுப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்பு பிரதமர், சிவில் சர்வீஸ் வீரர்களுடன் வீடியோ கான்பெரென்ஸ் மூலம் பிரதமர் உரையாட உள்ளார். பின்னர் மதியம், கெவாடியா மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சீப்ளேன் சேவையைத் திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து அவர் டெல்லிக்குப் புறப்பட உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News