Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.!

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.!

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 4:26 PM IST

பிரதமரின் கிசான் திட்டத்தில் இது வரை விண்ணப்பிக்காத விவசாயிகள் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இரண்டு தவணைகளை ஓரரே சமயத்தில் பெற முடியும். எனவே நாளைக்குள் விவசாயிகள் விண்ணப்பித்து விட்டால் களம் முழுவதும் இந்த திட்டத்தால் பயனடையலாம்.

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இது வரை 6 தவணைகளை மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், நாளை அக்டோபர் 31க்கு முன் விண்ணப்பித்து, அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் தவணையும், டிசம்பர் மாதம் இரண்டாவது தவணைக்கான பணத்தை அவரவர் வங்கிக் கணக்கில் பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வரும் நன்மைகளைப் விவசாயிகள் பெறுவதற்கு ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். மத்திய அரசு நேரடியாக உங்கள் வங்க கணக்கிற்கு உங்களுக்கான தவணையை வழங்குகிறது. எனவே உங்களுக்கு வங்கி கணக்கு இருப்பது அவசியம், மேலும் உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் விவசாயிகள் மொபைல் எண்ணும் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News