Kathir News
Begin typing your search above and press return to search.

அசாம்: தேர்வு விண்ணப்பங்களில் பாலின பிரிவுகளில் 'திருநங்கை' பிரிவை அறிமுகப்படுத்தியுள்ள பா.ஜ.க அரசு.!

அசாம்: தேர்வு விண்ணப்பங்களில் பாலின பிரிவுகளில் 'திருநங்கை' பிரிவை அறிமுகப்படுத்தியுள்ள பா.ஜ.க அரசு.!

அசாம்: தேர்வு விண்ணப்பங்களில் பாலின பிரிவுகளில் திருநங்கை பிரிவை அறிமுகப்படுத்தியுள்ள பா.ஜ.க அரசு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 11:22 PM IST

நாட்டில் ஆளும் பா.ஜ.க அரசு அசாம் மாநிலத்தில் திருநங்கை சமூகத்திற்கென கொண்டு வந்துள்ள ஒரு புதிய மற்றும் பெரிய வளர்ச்சியாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில் பாலின பிரிவுகளில் 'திருநங்கை' என்ற பிரிவைச் சேர்த்துள்ளது . மேலும் இவ்வாறு ஒரு தனிப் பிரிவை உருவாக்குவதில் நாட்டில் முதல் மாநிலமாகவும் அசாம் திகழ்கிறது.



அசாம் பொதுச் சேவை அமைப்பு (APSC) நடத்தும் ஒருங்கிணைந்த போட்டி தேர்வில் (CCE) 2020 இல் இந்த தனிப் பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ், காவல்துறை மற்றும் மற்ற சேவைகளுக்குத் தொடர்புடைய விண்ணப்பப் படிவங்களுக்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகள் 42 பேர் விண்ணப்பித்து உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், APSC தலைவர் பல்லப் பட்டாச்சார்யா, "ஆரம்பத்தில் செப்டம்பர் மாதம் வெளியிட்ட தேர்வு விண்ணப்பத்தில் திருநங்கைகளுக்கு எனத் தனிப் பிரிவைக் கொண்டுவரவில்லை. அதன் பிறகு முக்கிய திருநங்கை ஆர்வலரான ஸ்வாதி பிதன் பாருவா தனிப் பிரிவை விரைவில் அமைக்க எங்களை அணுகினார்," என்று தெரிவித்திருந்தார்.

"பின்னர் பாருவாவுடன் நாங்கள் கலந்துரையாடல் மேற்கொண்டோம் மற்றும் பின்னர் UPSC உடன் அணுகியதில் விண்ணப்பத்தை நிரப்பும் போது திருநங்கைகள் பிற வகை என்ற பிரிவில் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் திருநங்கைகளுக்கென தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது," என்றும் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News