Kathir News
Begin typing your search above and press return to search.

சிதறிக் கிடந்த தேசத்தை அகன்ற பாரதமாக மாற்றியவர் வல்லபாய் படேல் - அவரின் வீர வரலாறு குறித்த ஒரு பார்வை.!

சிதறிக் கிடந்த தேசத்தை அகன்ற பாரதமாக மாற்றியவர் வல்லபாய் படேல் - அவரின் வீர வரலாறு குறித்த ஒரு பார்வை.!

சிதறிக் கிடந்த தேசத்தை அகன்ற பாரதமாக மாற்றியவர் வல்லபாய் படேல் - அவரின் வீர வரலாறு குறித்த ஒரு பார்வை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Oct 2020 5:28 PM IST

வல்லபாய் படேல், 1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள், குஜராத் மாநிலம் கரம்சாத் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை சாவேரிபாய் படேல், ஒரு விவசாயி. வல்லபாய் படேல் அவர்கள் 1901-ஆம் ஆண்டு, "பாரிஸ்டர்" பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். பட்டம் பெற்று, தாயகம் திரும்பி, அகமதாபத்தில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.

காந்திஜியின் விடுதலையை உசுப்பி எழுப்பும் உரையைக் கேட்டவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு, சுதேசி இயக்கத்தில் இணைந்தார். குஜராத் மாநிலத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம் நிலவிய வேளையில் ஆங்கிலேய அரசிடம் வரிவிலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அப்போது, காந்திஜியை அழைத்து வந்து அவரது தலைமையில் படேல் வரி கொடா போராட்டம் நடத்தினார்.

அடுத்து, பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் பட்டேலுக்கு வெற்றி கிடைத்தது.இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமானது. கடைசியில் பிரிட்டிஷ் அரசு பணிந்தது. படேல் இளைஞனாக இருந்த காலத்தில் இது அவரது முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அன்றுமுதல் 'படைத்தலைவர்' என்னும் பொருள்படும் வகையில் காந்திஜி அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை ஒரு கூட்டத்தில் அளித்தார். அதிலிருந்து பொதுமக்களால் சர்தார் என்றே அன்போடு அழைக்கப்பட்டார். அதன்பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.

1947 - ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதும், சுதேச சமஸ்தானங்கள் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று, பிரிட்டிஸ்சார் விஷமத்தனமாக அறிவித்தது. உண்மையில் சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா ஒரு வலிமை மிக்க ஒரு நாடாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் பிரிட்டிஷார் சிந்தித்தனர். ஆனால் இந்தியாவின் துணை பிரதமரகவும், உள்துறை அமைச்சராகவும் அப்போது இருந்த படேல் தனது சாதுர்யத்தாலும், மனபலத்தாலும் யாருக்கும் அஞ்சாமல் இந்த விவகாரத்தை கையாண்டார்.

துண்டு துண்டாக கிடந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தது தான், உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்ட பணிகள். பேச்சு வார்த்தை , உடன்படிக்கை இல்லையேல் இரும்புக்கரம் என்று செயல்பட்ட இவருக்கும் நேருவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய நேரு விரும்பிய போது, படேல் மறுத்தார். 'ஆதாரம் வேண்டும்' என்றார். பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களை, இந்தியாவுக்குள்ளேயே தனி அந்தஸ்து அளித்து தங்க வைக்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் மற்ற நம் மக்களுடன் அவர்கள் இணைந்தே வாழ வேண்டும் என்று கறாராக கூறினார் படேல்.

காங்கிரசிலேயே பெரும்பான்மையானோர், படேலை பிரதமர் ஆக, வற்புறுத்தினர். ஆனால் கட்சியில் பிளவு வேண்டாம் எனக் கூறி அவர் பிரதமர் பதவியை மறுத்து விட்டார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சோமநாதர் கோயிலை மறு நிர்மாணம் செய்வதில் இவர் பெரும் பங்காற்றினார்... நேருவுக்கு, அந்த கோவிலை மீண்டும் நிர்மாணிப்பதில் விருப்பமில்லை எனக் கூறப்பட்டது. அனால் எதிர்ப்பை மீறி செயல்பட்டார்.

இறுதிக் காலம் வரை மகா தைரியம் மிக்கவராக தேசப்பணி ஆற்றிய படேல் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தமது 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்தியா சுதந்திரம் பெற்ற இரண்டே ஆண்டுகள் தான் அவர் வாழ்ந்தார் என்பது, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு எனக் கூறபபடுகிறது. அவர் நினைவாக பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் முயற்சியால் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் உயரம் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ரூபாய். 3 ஆயிரம் கோடி செலவில் குஜராத் மாநில அரசால் அமைக்கப்பட்ட இந்த சிலை நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது உலகம் முழுவதும் படேலின் பெயர் உச்சரிக்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News