Kathir News
Begin typing your search above and press return to search.

உ பி: பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி பெண்களிடம் அடிவாங்கும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்.!

உ பி: பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி பெண்களிடம் அடிவாங்கும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்.!

உ பி: பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி பெண்களிடம் அடிவாங்கும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2020 3:17 PM GMT

தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அனுஜ் மிஸ்ரா பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறி இரண்டு பெண்கள் அவரை சரமாரியாக அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.




இந்த வீடியோ உத்தரப் பிரதேச மாநிலம் கொட்வாலி பகுதியில் ஓராய் இரயில் நிலையத்துக்கு அருகே பதிவு செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த வீடியோவில் பெண்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் அனுஜ் மிஸ்ராவை பெண்கள் துன்புறுத்தப்பட்டதைக் கூறி அடிப்பதைக் காண முடிந்தது.

இதற்கிடையில், உத்தர பிரதேச காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், இது அவர்கள் இருவருக்கும் இருந்து வரும் அரசியல் தொடர்பான பிரச்சனை என்று கூறியுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு செயல்படாமல் இதற்காக அந்த பெண் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக அவர் தற்போதிருக்கும் மாவட்ட தலைவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அனுஜ் மிஸ்ரா பிரியங்கா காந்தி வாத்ராவுடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் உலாவி வருகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News