16 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்து 22 வயது பெண்ணுடன் திருமணம் - மொத்தமாக சிக்கிய குடும்பம்!

By : Kathir Webdesk
16 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து, 22 வயது பெண்ணுடன் திருமணம் செய்த குற்றத்தில், மணப்பெண்ணும் அவளது பெற்றோர் மற்றும் மதகுரு உட்பட நான்கு பேரை கான்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருமணத்தை நடத்தி வைத்த பெண், அவரது பெற்றோர் மற்றும் மதகுரு ஆகியோரை நாங்கள் கைது செய்துள்ளோம், என்று உள்ளூர் போலீசார் கூறினார். அவர்கள் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களின் பங்கை விசாரித்து வருகின்றனர்.
நான்கு பேர் மீதும் IPC பிரிவுகள் 363 (கடத்தல்) மற்றும் 342 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக குழந்தை திருமணத் தடைச் சட்டம் மற்றும் மதமாற்றத் தடைச் சட்டத்தின் விதிகளையும் போலீசார் செயல்படுத்தியுள்ளனர். அந்த பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சிறுவனின் தாயார் போலீசில் அளித்த புகாரில், ஒரு முஸ்லிம் குடும்பம் தனது மகனைக் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். இதற்கிடையில், பஜ்ரங் தள் அமைப்பினர் உள்ளூர் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். பஜ்ரங் தளத்தின் கான்பூர் பிரந்த் சுரக்ஷா பிரமுக் ஆஷிஷ் திரிபாதி
கூறுகையில், ஆரம்பத்தில் போலீசார் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றும் கூறினார்.
"சம்பவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த பிறகு, நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று வழக்கின் தீவிரம் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கினோம். பின்னர் அவர்கள் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்," என்று திரிபாதி மேலும் கூறினார்.
Input From: Indian express
