பருவநிலை மாற்றம் குறித்து கவனிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்!
பருவநிலை மாற்றங்கள் குறித்த பல்வேறு தாக்கங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.
By : Bharathi Latha
பருவநிலை மாற்றம், சிறு தானியங்கள் உற்பத்தி, விவசாயிகளின் வருவாயை உயர்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் புத்தக நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் நடைபெற்ற புத்தக நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு தளவாடங்கள், செயற்கைக் கோள்கள், விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புத்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதை வேளையில் அதிக கவனம் பெறாத நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பருவநிலை மாற்றம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் வேளாண்மை துறையில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு பருவநிலை மாற்றத்தை தடுப்பது மற்றும் அதை எதிர்கொள்வதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் புத்தக நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். பருவநிலை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படா விட்டால், நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். அதற்கான விலையை யாராலும் கொடுக்க முடியாது. ஒரு சில தினங்களில் அதீத மழை மொத்தமாக பெய்து வருகிறது. அதீத மழைப்பொழிவில் இருந்து எந்த ஒவ்வொரு நகரமும், கிராமமும் தப்பவே முடியாது. இந்த மாதிரியான பருவநிலை சார்ந்த ஆராய்ச்சிகள் தற்போது அதிகமாக நடைபெற வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Hindustan News