கடந்த கால நினைவுகள் விலை மதிப்பற்றவை... பிரதமர் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிப்பூர்வமான தகவல்கள்...
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
By : Bharathi Latha
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். தாம் முதலமைச்சராக இருந்த போது 2010-ம் ஆண்டு மதுரையில் இதுபோன்ற சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், அதில் சௌராஷ்டிராவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார். தமிழ்நாட்டில் இருந்து விருந்தினர்கள் அதே பாசத்துடன் சௌராஷ்டிரா வந்துள்ளதாக அவர் கூறினார். குஜராத்தில் சுற்றுலா அனுபவத்தை விருந்தினர்கள் உணர்ந்ததாகவும், கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் கடந்த காலத்தின் விலைமதிப்பற்ற நினைவுகள், தற்காலத்திற்கான அனுபவங்கள், எதிர்காலத்திற்கான தீர்மானங்கள் மற்றும் உத்வேகங்களை காணலாம் என்று தெரிவித்தார். இன்றைய நிகழ்ச்சிக்காக சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் அவர் வாழ்த்து கூறினார். இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முக்கிய கலாச்சார நிகழ்வுகளை நாம் கொண்டாடி வருகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இது தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிராவின் சங்கமமாக மட்டுமல்லாமல், தேவி மீனாட்சி, தேவி பார்வதி உருவில் சக்தியை வழிபடும் திருவிழாவாகவும் உள்ளது என்று கூறினார். அத்துடன், கடவுள் சோம்நாத், கடவுள் ராம்நாத் ஆகிய வடிவில் சிவனை கொண்டாடும் விழாவாகவும் இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேசமே முதலில் எனும் சர்தார் பட்டேல், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் சிந்தனையை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் அடையாளப்படுத்துவதாக அவர் கூறினார். நாட்டை கட்டமைப்பதில் இந்த பாரம்பரியத்தையொட்டி நாம் முன்னோக்கி செல்லவேண்டும் என்று பிரதமர் கூறினார்.
பன்முகத் தன்மையை சிறப்பம்சமாக இந்திய நாடு காண்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த பன்முகத் தன்மை, நம்மை பிரிக்காமல், நமது பிணைப்பையும், உறவையும் வலுப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். பல்வேறு நீரோடைகள், இணையும் போது, சங்கமம் உருவாகுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கும்பமேளா போன்ற நிகழ்வுகள் நதிகளின் சங்கமத்தில் நடைபெறுவதாகக் கூறினார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் இன்று புதிய வடிவத்தை நோக்கி முன்னோக்கி செல்வது, இந்த சங்கமத்தின் சக்தியாகும் என்று அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News