ஜம்மு காஷ்மீரில் கடுங்குளிர்.. குளிரை பொருட்படுத்தாமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள்.!
ஜம்மு காஷ்மீரில் கடுங்குளிர்.. குளிரை பொருட்படுத்தாமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள்.!

By : Kathir Webdesk
இமாச்சலப் பிரதேசத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடுங்குளிர் நிலவுவதுடன் உறைபனி பொழிவதால் தரையெங்கும் பனி உறைந்து வெண்ணிறமாக காட்சியளிக்கிறது. நாட்டின் வட மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. இமயமலைப் பகுதிகளில் உறைநிலைக்குக் கீழே கடுங்குளிர் நிலவுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் மந்தோல் என்னுமிடத்தில் தரை, கட்டடங்களின் கூரை, வாகனங்களின் மேற்பகுதி, செடிகொடிகள் மரங்கள் ஆகியவற்றின் மீது பனி உறைந்துள்ளதால் வெண்ணிறப் போர்வையால் மூடியது போன்று காட்சியளிக்கிறது. இதே போன்று ஜம்முவில் கடுங்குளிரால் பனி உறைந்துள்ளதால் முகல் சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதற்கு நமது ராணுவத்தினர் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் செயல்களை அனைத்து குடிமக்களும் போற்ற வேண்டும். நாம் சாதாரண குளிரை தாங்க முடியால் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வோம், ஆனால் எல்லையில் இருப்பவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் அனைவருக்கும் அப்போதாவது தேசப்பக்தி வருமா என்று தெரியவில்லை.
