Kathir News
Begin typing your search above and press return to search.

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 1,700 வீடியோ கிளிப்புகள் சேகரிப்பு - திடுக்கிட வைக்கும் திருப்பங்கள்!

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 1,700 வீடியோ கிளிப்புகள் சேகரிப்பு - திடுக்கிட வைக்கும் திருப்பங்கள்!

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 1,700 வீடியோ கிளிப்புகள் சேகரிப்பு - திடுக்கிட வைக்கும் திருப்பங்கள்!

Muruganandham MBy : Muruganandham M

  |  1 Feb 2021 7:18 AM GMT

குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக தில்லி காவல்துறையினர் இதுவரை 1,700 வீடியோ கிளிப்புகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகளைப் பெற்றுள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்களின் உதவியின் மூலம் ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காண்பதாக இணை போலீஸ் கமிஷனர் பி.கே. சிங் கூறினார்.

செங்கோட்டை வன்முறை தொடர்பான ஒன்பது வழக்குகளை விசாரிக்கும் குற்றப்பிரிவு காவல் துறை, மொபைல் போன் அழைப்புகள் மற்றும் டிராக்டர்களின் பதிவு எண்களின் தரவுகளையும் ஆய்வு செய்து வருவதாக சிங் கூறினார்.

வன்முறை தொடர்பான வீடியோ கிளிப்புகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ய தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறை தொடர்பான டெல்லி காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து 1,700 வீடியோ கிளிப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளனர். வீடியோக்கள் மூலம், வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை நாங்கள் அடையாளம் காண்போம்" என்று சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ட்ரோனில் பொருத்தப்பட்ட கேமராக்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும், செங்கோட்டையில் அழிக்கப்பட்ட பகுதியின் 3 டி மேப்பிங்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். தடயவியல் நிபுணர்கள் குழு சனிக்கிழமை செங்கோட்டைக்கு சென்று மாதிரிகள் சேகரித்தது.

தில்லி காவல்துறை சம்பவங்களுக்கு சாட்சி அல்லது சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் room number 215, second floor, Old Delhi Police Headquarters, ITO during office hours, on any working day or contact on 8750871237 or 011-23490094 or send e-mail on kisanandolanriots.26jain2021@gmmail.com என்ற முகவரியில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News