பொது சிவில் சட்டம், பெண்களுக்கு கல்வி, தீவிரவாத செயல்பாடுகளை கண்டறிய தனி அமைப்பு - அசத்தும் பா.ஜ.க குஜராத் தேர்தல் அறிக்கை
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பா.ஜ.க அரசு வெளியிட்டுள்ளது.
By : Mohan Raj
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பா.ஜ.க அரசு வெளியிட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த தேர்தல் அறிக்கை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி தலைமை அலுவலகத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர பாட்டில் மற்றும் குஜராத் பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாட்டில் முன்னிலையில் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது, மற்றும் தீவிரவாத செயல்பாடுகளை கண்டறிய புதிய அமைப்பு ஏற்படுத்துவது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் அந்த தேர்தல் அறிக்கையில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவது மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதார உயர்த்துவது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்குவது தற்போது ஒரு குடும்பத்திற்கு மருத்துவ செலவுக்காக வழங்கப்பட்ட தொகையை 10 இலட்சமாக உயர்த்தி வழங்குவது என பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் உயர்நிலை வரையில் இலவச கல்வி வழங்கப்படும் எனவும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் எனவும், தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் கடல் உணவு பாதுகாப்பகம் அமைக்கப்படவும்எனவும் ஆரம்ப சுகாதார மையங்களில் இலவச உடல் பரிசோதனை எனவும், 20 ஆயிரம் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உலக தரத்திலான கல்வி வழங்கப்படும் எனவும் குஜராத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.