கேரளாவில் கொரோனா கட்டணத்தை உயர்த்திய கம்யூனிஸ்ட் அரசு: அதிர்ச்சியில் மக்கள்.!
கேரளாவில் கொரோனா கட்டணத்தை உயர்த்திய கம்யூனிஸ்ட் அரசு: அதிர்ச்சியில் மக்கள்.!
By : Kathir Webdesk
கேரளாவில் கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பரிசோதனைக்கான கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.
இது தொடர்பாக கேரள சுகாதார துறை அமைச்சர் சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரளாவில் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதணை கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் உயர்வால் ஏழை மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட கொரனோ பரிசோதனைக்கும் கட்டணம் அதிகளவு வசூலிக்கப்படுவதற்கு அம்மாநில முதலமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
நாட்டிலேயே முன்மாதிரியான மாநிலம் என்று சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் அரசு தற்போது சுகாதாரத்துறையில் கொள்ளை அடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றது. ஏற்கெனவே கொரனோ தொற்று தினமும் 5000க்கும் அதிகமானோர்களுக்கு உறுதி செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது கட்டண உயர்வு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.