Kathir News
Begin typing your search above and press return to search.

காற்றாலை மின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும்70% கருவிகள் எங்கே தயாராகிறது தெரியுமா.?

காற்றாலை மின்சார உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் மின்சார ஜெனரேட்டர்களுக்கு சுங்க வரிச் சலுகை

காற்றாலை மின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும்70%   கருவிகள் எங்கே தயாராகிறது தெரியுமா.?
X

PHOTOGRPAH BY CARLOS BARRIA, REUTERS

MuruganandhamBy : Muruganandham

  |  31 July 2021 5:11 AM GMT

மத்திய அரசு காற்றாலை மின்சாரம் உள்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மற்றும் திட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உற்பத்தி செய்யும் சாதனங்களை மட்டுமே காற்றாலை திட்டங்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், நேரடி வழியில், 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை தொடங்கப்படவுள்ள திட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு இடையே சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்யப்படும் போது விதிக்கப்படும் ஐஎஸ்டிஎஸ் (Inter State Transmission System) வரி ரத்து செய்யப்படுகிறது.

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தை போட்டியான ஏலச் சூழலில் கொள்முதல் செய்வதற்காக, மின்சார விற்பனை விலையை வரையறுத்து நிலையான ஏல விதிமுறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியை ஊக்குவிக்க, காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான எலக்டிரிக் ஜெனரேட்டர்களின் இறக்குமதிக்கு சுங்க வரியில் சலுகை வழங்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கு அவற்றின் உற்பத்திக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் அந்தந்த நிலப்பரப்புக்கு ஏற்ற திட்டங்கள் என்பதால் இவை ஆந்திரப் பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே வணிக ரீதியில் செயல்படுத்தப்படுகிறது. ஜூன் 2021 நிலவரப்படி நாட்டில் உள்ள காற்றாலை மின் உற்பத்தித் திறன் 39,486 மெகாவாட்டாக உள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் காற்றாலை கருவிகளில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News