Kathir News
Begin typing your search above and press return to search.

வருடம் 5000 கோடி கமிஷன் பார்க்கும் காங்கிரஸ் ஏஜென்ட்கள்.. பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏற்பாடுகள் கன ஜோர்.!

வருடம் 5000 கோடி கமிஷன் பார்க்கும் காங்கிரஸ் ஏஜென்ட்கள்.. பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏற்பாடுகள் கன ஜோர்.!

வருடம் 5000 கோடி கமிஷன் பார்க்கும் காங்கிரஸ் ஏஜென்ட்கள்.. பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏற்பாடுகள் கன ஜோர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2020 3:54 PM IST

டெல்லியில் கடந்த 2 வாரங்களாக வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் காங்கிரஸ் மற்றும் பஞ்சாப் மாநில அரசு உள்ளது என்று பாஜகவினர் குற்றம்சாட்டினர். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததன் நோக்கமே இடைதரர்கள் இன்றி அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும் என்பதுதான்.

ஆனால் இதற்கு எதிராக கோடிகளில் பணத்தை பார்த்த ஏஜெண்ட்கள் விவசாயிகளை தூண்டி விட்டு வருகின்றனர். இந்த சட்டத்தால் விவசாயத்திற்கு பெருத்த நஷ்ம் வரும். எனவே நீங்கள் போராடுங்கள் என பொய்யான தகவல்களை சொல்லி விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களுக்கு நல்லது இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கியதால் போராட்டம் நடத்துகின்றனர்.

இதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் அதிகளவு கோதுமை பயிர் செய்வது வழக்கம். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானங்களை இருந்த இடத்தில் காங்கிரஸ் ஏஜெண்ட்டுகள் பார்த்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

உட்கார்ந்த இடத்திலேயே வருடத்திற்கு ரூ.5000 கோடி கமிஷன் கோதுமையில் வருவதாகவும், இதனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தால் தங்களின் கமிஷன் அடியோடு அழிந்து போய்விடும் என்ற நோக்கத்திலேயே காங்கிரஸ் கட்சி ஏஜெண்டுகள் விவசாயிகளை தூண்டி விட்டு வருகிறது.

இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக மெத்தை, தலையணை உள்ளிட்ட வசதிகளை கமிஷன் ஏஜெண்ட்டுகள் செய்து வருகிறது. நீங்களே நினைத்து பாருங்கள் ஒரு விவசாயிக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரம் செய்து கொடுக்க வேண்டும். முழுக்க முழுக்க விவசாயிகளை சுரண்டி தின்ற கூட்டம்தான் இப்படி செய்கிறது. விரைவில் அனைத்து விவசாயிகளும் தங்களுக்காக கொண்டு வந்த வேளாண் சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்வார்கள் என்பது மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News