குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கீழ்த்தரமாக பேசிய காங்கிரஸ் - திமிராக பதிலளித்த சோனியா
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவதூறாக பேசி தற்பொழுது காங்கிரஸ் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது.

By : Mohan Raj
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவதூறாக பேசி தற்பொழுது காங்கிரஸ் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது.
நாட்டின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் குறித்து காங்கிரஸ் எம்.பி'யும், மக்களவை காங்கிரஸ் தலைவருமான ஆதிரஞ்சன் சவுத்ரி 'ராஷ்டிரபத்தினி' என அவதூறாக பேசினார்.
இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்பொழுது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அமைச்சர் ஸ்மிரிதி ராணி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சர் ஸ்மிரிதி ராணி அவையில், 'அதிரஞ்சன் சவுத்திரி திரௌபதி முர்முவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்! பழங்குடியினரின் விரோதி காங்கிரஸ், பெண்களின் விரோதி காங்கிரஸ், ஏழைகளின் விரோதி காங்கிரஸ், சோனியா காந்தி பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், ஏழைகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்' என ஆக்ரோஷமாக கூறியது பரபரப்பாகியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 'காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு பெண் என்பதன் முறையில் என் கட்சியினர் கூறியது தவறுதான் என மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்' என குறிப்பிட்டார்.
ஆனால் இந்த நிலையில் சோனியா காந்தி செய்த காரியம் இந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாக உருவெடுக்க வைத்துள்ளது. அதாவது இந்த விவகாரம் குறித்து சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்கையில், 'அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்' என கோவமாக கேட்டுவிட்டு சென்றார். ஆனால் ஆதிரஞ்சன் சௌத்திரி மன்னிப்பு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என பிடிவாதம் காட்டிய ஆதிரஞ்சன் சௌத்திரி, விவகாரம் பெரிதாகி வருவதை கண்டு சுதாரித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மன்னிப்பு கேட்க தயார் என தாமதமாக ஒப்புக்கொண்டார்.
