Kathir News
Begin typing your search above and press return to search.

உதைத்துக் கொண்டே இருக்கும்  காங்கிரஸ், வலி பொறுத்துக் கொண்டே சுமக்கும் திமுக - காரணங்கள் இதுதானாம்.!

உதைத்துக் கொண்டே இருக்கும்  காங்கிரஸ், வலி பொறுத்துக் கொண்டே சுமக்கும் திமுக - காரணங்கள் இதுதானாம்.!

உதைத்துக் கொண்டே இருக்கும்  காங்கிரஸ், வலி பொறுத்துக் கொண்டே சுமக்கும் திமுக - காரணங்கள் இதுதானாம்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  21 Nov 2020 11:21 AM GMT

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொடர்ச்சியாக நிலையான ஒரு நண்பனாக காங்கிரஸ் இருந்து வந்தாலும் சமீபத்தில் இரு கட்சிகளிடையே அதிக அளவில் அரசல் புரசல்கள் காணப்படுகின்றன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை தொடர்புடைய ஏழு தமிழர்கள் விவகாரத்தில் அவர்களை விடுவிக்கவே கூடாது என்ற நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் திமுகவின் நிலை நேர்மாறாக உள்ளது. இந்நிலையில் இவர்களின் விடுதலையை கோருபவர்கள் தமிழர்களே இல்லை என்று காங்கிரஸ் திமுகவை மறைமுகமாக சாடி வருகிறது.

திமுகவில் உள்ள 2 ஆம் கட்ட தலைவர்கள் காங்கிரசை சரமாரியாக வசைபாடி வருகின்றனர், காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஒரு சுமை என்றும், செல்வாக்கு இல்லாத அந்த கட்சியை திமுக இனி கழற்றி விட்டுவிடும் என்று சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்புவும் கூட கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில் காங்கிரசை திமுக எப்போதும் துரத்தி விடாது என்றும், அப்படி துரத்தினால் எப்போதும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் திமுகவுக்கு அது ஆபத்தில் முடியும் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

பொதுவாக சென்ற 3 சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடையில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரசின் வாக்கு வங்கி சராசரியாக 5 சதமாக நிலையாக இருந்து வருகிறது, பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் இது நிரூபிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக எப்போது திமுக அணி வெற்றி பெற்றாலும் அது பெறும் மொத்த வாக்குகள் சராசரி, அதிமுக பெற்ற வாக்கு சராசரியைவிட மிக அதிகமாக சென்றது கிடையாது. ஒரு சதவீதம் அல்லது 2 சதவீத வாக்கு சதவீத அளவில்தான் வெற்றியை சந்தித்து இருக்கிறது.

சென்ற 2016 தேர்தலில் எங்களை விட ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று அதிமுக வெற்றி பெற்றது என்று திமுகவினர் மார்தட்டுவார்கள், ஆனால் அந்த தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்றது.

ஆனால் திமுக காங்கிரஸ் உட்பட பலவேறு கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டணியாக மோதியது, அதனால்தான் ஒரு சதவீத வித்தியாசம்.

அப்படி ஒருவேளை திமுக காங்கிரசை கழற்றி விட்டால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தனியாகவோ அல்லது சேரும் கட்சிகளுடன் கூட்டணியுடனோ நிற்கும் பட்சத்தில் திமுகவுக்கு, அதிமுகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சதவீத அளவில் அது பெறக் கூடும்.

அதன் மூலம் அது வழக்கமாக பெறும் வாக்கு சதவீதத்தை விட கூடுதலாக பெற வாய்ப்புண்டு. காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் போனாலும் அது பெறும் வாக்குகள் திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் பீகாரில் காங்கிரஸ் அடைந்த பின்னடைவை வைத்து தமிழ் நாட்டில் காங்கிரசை எடைபோடக் கூடாது என்றும், எங்களுக்கு பலமுள்ள தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் தரப்பட்டுள்ளது என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர். நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுக தராவிட்டால் எப்படிப் பெற வேண்டுமோ அந்த முறையில் பெற்றே தீருவோம் என்கின்றனர்.

காங்கிரசை திமுக மேலும் இருக பற்றியிருப்பதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது 2 G விவகாரம் எனக் கூறப்படுகிறது, காங்கிரஸ் ஆதரவாளர்களான பல்கிவாலா போன்ற தொழிலதிபர்கள் திமுகவின் மிக முக்கிய தலைவர் ஒருவரை காப்பாற்ற மேற்கொண்ட தந்திரங்கள் காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறினால் ஒட்டுமொத்த திமுகவும் அம்பேல்தானாம்..

அதனால்தான் காங்கிரஸ் கட்சியை காய்ந்து போன கருவாடு என தமிழகத்தில் வருணிக்கப்பட்டாலும் திமுகவால் அக்கக்ட்சியை கழற்றி விடமுடியாது, அது எவ்வளவுதான் தனது பின்னங்கால்களால் உதைத்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு திமுக சென்றுதான் ஆகவேண்டும் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News