Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டசபைக்குள் ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் கட்சி தலைவர் - அமளி துமளியான கர்நாடக அரசியல் வட்டாரம்!

சட்டசபைக்குள் ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் கட்சி தலைவர் - அமளி துமளியான கர்நாடக அரசியல் வட்டாரம்!

சட்டசபைக்குள் ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் கட்சி தலைவர் - அமளி துமளியான கர்நாடக அரசியல் வட்டாரம்!

Muruganandham MBy : Muruganandham M

  |  30 Jan 2021 4:08 PM GMT

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர், சட்டமன்றத்தில் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ கிளிப்களைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை சில கன்னட செய்தி சேனல்கள் வெளியிட்ட செய்திகுறிப்பில், காங்கிரஸ் எம்.எல்.சி பிரகாஷ் ரத்தோட் சட்டமன்ற சபையில் நடவடிக்கைகளின் போது ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாக, ஒரு வீடியோவை ஒளிபரப்பியது. அதில் ரத்தோட் சில வீடியோக்களை ஸ்க்ரோலிங் செய்வதைக் காட்டுகிறது.

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டுகளை மறுத்து, கேள்வி நேரத்தில் அரசாங்கத்திடம் கேட்க விரும்பும் கேள்விக்கான பொருள்களைத் தேடுவதாகவும், தனது மொபைல் போன் சேமிப்பு நிரம்பியதால் சில தகவல்களை நீக்கியதாகவும் கூறினார்.

நான் கேள்விக்குரிய விஷயங்களைத் தேடும்போது, ​​எனது செல்போன் மெமரி நிரம்பியிருந்ததால் பல செய்திகளை நான் நீக்கினேன். நீங்கள் (ஊடகங்கள்) என்ன பார்த்தீர்கள் என எனக்குத் தெரியாது என்று கூறிய அவர், நான் ஒருபோதும் இதுபோன்ற செயல்களைச் செய்யமாட்டேன், இதுபோன்றவற்றைப் பார்க்க மாட்டேன் ”என்று கூறியுள்ளார்.

முன்னதாக 2012 ல், மூன்று அமைச்சர்கள் மாநில சட்டசபையில் மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்ததாகக் கூறி கேமராவில் சிக்கினர், அப்போதைய அரசாங்கத்திற்கு பேரிடியாக அமைந்தாலும், இந்த சம்பவம் தொடர்பான பின்னடைவைத் தொடர்ந்து, மூன்று அமைச்சர்களும் ராஜினாமா செய்ய ஒப்புதல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News