Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் MP ஷாஷி தாரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சரதேசி ஆகியோர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு!

காங்கிரஸ் MP ஷாஷி தாரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சரதேசி ஆகியோர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு!

காங்கிரஸ் MP ஷாஷி தாரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சரதேசி ஆகியோர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு!

Saffron MomBy : Saffron Mom

  |  29 Jan 2021 6:00 PM GMT

ஜனவரி 26 இல் டெல்லியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்படுத்திய கலவரத்தைத் தொடர்ந்து அதன் முக்கிய வளர்ச்சியாக, நொய்டா காவல்துறை நாடாளுமன்ற உறுப்பினரான ராஜதீப் ஷாஷி தாரூர், பத்திரிகையாளர்கள் ராஜதீப் சரதேசி, மிருனாள் பாண்டே, வினோத் K ஜோஸ் மற்றும் பலர் மீது தேச துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளது.

வியாழக்கிழமை அன்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR யில், அவர்கள் ஜனவரி 26 இல் நடந்த டிராக்டர் பேரணியில் ஒரு விவசாயியை மரணம் தொடர்பாகத் தவறான மற்றும் வதந்திகளை டிவிட்டரில் மற்றும் செய்திகளாகப் பரப்பியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த FIR யில் ஹெரால்ட் குழுவின் தலைமை ஆசிரியரான சபார் ஆகா, கேரவன் ஆசிரியர் ஆனந்த் நாத் ஆகியோர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது, இரு மதங்களிடையே பகைமை உண்டாக்குவது, பகைமையைத் தூண்டுவது போன்றவற்றிற்காகச் சட்டம் 153A கீழ், 153B, மத நம்பிக்கைகளை அவமதிப்பதிற்காக 298 கீழ், 504 கீழ், 124-A கீழ், இந்தியத் தண்டனை சட்டம் 120-B மற்றும் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காவல்துறை போராட்டக்காரர்கள் காவல் தடுப்புகளை உடைத்து ITO விற்கு விரைந்து செல்லும் வீடீயோவையும் வெளியிட்டுள்ளது. அதன் விளைவாகவே விபத்தில் இறந்ததாகவே பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தெரிவித்துள்ளது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News