Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் தலைவர் பதவியை குறிவைத்து நடக்கும் சலசலப்பு - ராகுலை ஓரங்கட்ட திட்டமா?

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதை தொடரும் போராட்டம் இந்த இருவருக்கு வாய்ப்பு?

காங்கிரஸ் தலைவர் பதவியை  குறிவைத்து நடக்கும் சலசலப்பு - ராகுலை ஓரங்கட்ட திட்டமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Sep 2022 12:44 AM GMT

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான வேலைகள் தற்போது முழு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் 24ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட விரும்பினால் யார் யார் போட்டியிடுவார்கள்? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது கட்சி தலைமையில் மீது அதிருப்தியில் இருக்கும் ஜி 23 குழுவில் இருந்து ராஜீவ் காந்தி குடும்பத்தை விமர்சித்த சசி தரூர் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ராகுல் சோனியா காந்திக்கு விசுவாசமாக இருக்கும் அசோக் கெலாட் என இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே தற்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.


காங்கிரஸ் கட்சியின் எம் பி ஆக இருக்கும் சுசி தரூர் நேற்று சோனியா காந்தியின் சந்தித்து பேசி இருக்கிறார். மேலும் இவருடைய இந்த சந்திப்பின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் இவர் நிச்சயம் போட்டியிடுகிறார் என்பது கட்சித் தொண்டர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததின் காரணமாக கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி தன்னுடைய தலைமை பொறுப்பை வேண்டாம் என்று விளங்கி இருக்கிறார். சோனியா காந்தி 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் 23 தலைவர்களுடன் ஒன்றுகூடி ஜி 23 என்ற ஒரு குழுவை உருவாக்கி உள்ளார்.


இந்த குழு கட்சிக்கு முழு நேர தலைவர் வேண்டும் மற்றும் உள்கட்சித் தேர்தல்கள் விரைந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தது. இதன் காரணமாக தற்போத உள்கட்சி தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதை ஒட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்புகிறார்கள். ஆனால் 'தனக்கு தலைவர் பதவி வேண்டாம்' என்று ராகுல் காந்தி மறுத்து இருக்கிறார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அசோக் ஒரு பக்கம், அதிருப்தியில் இருக்கும் சுசி மற்றொரு பக்கம் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்தது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News