Kathir News
Begin typing your search above and press return to search.

10 வருடம் வெறும் பம்மாத்து காட்டிய காங்கிரஸ் - மூன்றே ஆண்டுகளில், விவசாயிகளுக்கு ரூ 95,000 கோடி அளித்த மத்திய அரசு!

10 வருடம் வெறும் பம்மாத்து காட்டிய காங்கிரஸ் - மூன்றே ஆண்டுகளில், விவசாயிகளுக்கு ரூ 95,000 கோடி அளித்த மத்திய அரசு!

10 வருடம் வெறும் பம்மாத்து காட்டிய காங்கிரஸ் - மூன்றே ஆண்டுகளில், விவசாயிகளுக்கு ரூ 95,000 கோடி அளித்த மத்திய அரசு!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  24 Nov 2020 11:45 AM IST

காங்கிரஸ் ஆட்சியின் பத்து வருட காலத்தில் வெறும் ரூ 60,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசோ, மூன்றே ஆண்டுகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ 95,000 கோடியை நேரடியாக செலுத்தியுள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் மட்டும், 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 4,400 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த அவர் மேலும், ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் நபார்டு மூலம் பல்வேறு திட்டங்களூக்கு ரூ 1,20,000 கோடியை வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், சிறு அளவிலான உணவு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நீலப் புரட்சிக்காக ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு ரூ 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மீன் ஏற்றுமதி மாநிலமான தமிழ்நாடு, மேற்கண்ட திட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் முதலிடத்துக்கு வர வாய்ப்புகள் உண்டு. கிராமப்புற குடும்பங்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது லட்சம் கிராமப்புற குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் இது வரை குடி நீர் இணைப்புகளை பெற்றிருக்கின்றனர். அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்குப் போதுமான நிதியை ஒதுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலிலும், நீர் மேலாண்மை திட்டங்களிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News