Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பர் 15 பிறகு தொடங்கவிருக்கும் அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணி.!

டிசம்பர் 15 பிறகு தொடங்கவிருக்கும் அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணி.!

டிசம்பர் 15 பிறகு தொடங்கவிருக்கும் அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணி.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  9 Dec 2020 5:04 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குகளில் வெற்றி பெற்று அமையவிருக்கும் ராமர் கோவிலின் அடிகள் நாட்டு விழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையால் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு முன்னேற்ற வளர்ச்சியாக ராமர் கோவிலின் கட்டுமான பணி டிசம்பர் 15 பிறகு தொடங்கவுள்ளது.

இந்த முடிவானது, ராமர் கோவிலின் கட்டுமான குழு, லார்சென்&டௌப்ரோவின் வல்லுநர்கள், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, IIT ரூக்கி, அச்சர் தாம் கோவிலின் கட்டிடக் கலைஞர் ப்ரஹாம் விஹாரி சுவாமி மற்றும் ராமர் கோவிலின் கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான ஆஷிஷ் சோம்புரா முதலியோர் கலந்துகொண்ட கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

இதற்கான அறிக்கையை ராமர் கோவிலின் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவின் கீழ் உள்ள வல்லுநர்கள் விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர். மேலும், கட்டுமான பணியின் முதல் கட்டமாக 67 ஏக்கர் கொண்ட ராம் ஜென்ம பூமி வளாகத்தைச் சுற்றி வெளியே பாதுகாப்பு சுவர்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த முக்கிய கூட்டத்தில் ஓய்வு பெற்ற IAS அதிகாரி சத்ருகன் சிங் மற்றும் ராம் ஜென்ம பூமியின் தீரத் க்ஷேத்ரா அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் மிஸ்ராவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News