Kathir News
Begin typing your search above and press return to search.

சர்ச்சையில் சிக்கிய கானா நிறுவன ஊழியர்! பணிநீக்கம் கோரும் பா.ஜ.க!

சர்ச்சையில் சிக்கிய கானா நிறுவன ஊழியர்! பணிநீக்கம் கோரும் பா.ஜ.க!

சர்ச்சையில் சிக்கிய கானா நிறுவன ஊழியர்! பணிநீக்கம் கோரும் பா.ஜ.க!

Saffron MomBy : Saffron Mom

  |  13 Feb 2021 10:26 AM GMT

புதன்கிழமை அன்று பஜ்ரங் தால் ஆர்வலர் ரிங்கு சர்மா கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்டார். இவரது மரணம் குறித்து அவதூறு செய்திகளைப் பரப்பும் வகையில் பிரபல இசை தள செயலியான கானாவின் ஊழியர் தன்சீலா அனீஸ் டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். அவரை பணி நீக்கம் செய்யுமாறு சண்டிகரில் பா.ஜ.க வின் செய்தி தொடர்பாளர் கெளரவ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கொடூர கொலை சம்பவத்தை மக்கள் கொண்டாடி மகிழ்வதைப் போன்று அந்த ட்விட் இருந்தது.

கானாவின் CEO விற்கு எழுதிய கடித்ததில், "தொடர்ச்சியாக நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் மக்களைக் கடந்து வந்துள்ளோம், இம்முறை தன்சிலா அனீஸ் செய்தியால் கானா சர்ச்சையில் காணப்பட்டுள்ளது," என்று கோயல் கூறியிருந்தார். கானாவின் ஊழியர் சமூக வலைத்தளத்தில் அவதூறு செய்திகளை பரப்பியதற்குக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

"அவரது ஒவ்வொரு முறை எழுதும் போது இந்து கடவுள் மீது அவதூறு சொற்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். இம்முறை அவர் டெல்லியில் பெற்றோர்கள் முன்னிலையில் பின்னால் இருந்து குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ரிங்கு சர்மா மரணத்தைக் கேலி செய்யும் வகையில் எழுதியுள்ளார்."

"உடனடி நடவடிக்கையாக அவரை பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்." தன்சீலா அனீஸ் மீது தனியாகப் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் அவர் இந்து கடவுள்களை அவதூறு சொற்களால் கேலி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத எண்ணங்களைக் கொண்டவர்களுக்கே இதுபோன்று ஒரு மரணத்தைக் கேலி செய்து எழுத முடியும். இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னர் கானா ஒரு அறிக்கையை வெளியிட்டது, "இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று குறிப்பிட்டிருந்தது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News