ஒரு சீட்டுக்கு கெஞ்சனுமா? பஞ்சாபில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகள் எதிர்கொள்ளும் அடையாள நெருக்கடி!
Converted Dalit Christians face an identity crisis while availing benefits of various schemes as Dalits
By : Kathir Webdesk
பஞ்சாப் மாநிலம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள தலித்துகள் மத்தியில் முற்றிலும் மாறுபட்ட பிரச்சனை முளைத்துள்ளது. பஞ்சாபில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகள் அடையாள நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் .
அவர்கள் வேறு மத நம்பிக்கையைத் தழுவியிருந்தாலும், அவர்கள் தலித் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தியே பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெறுகிறார்கள். எனவே இவர்கள் இப்போது தங்களை தலித்துகளாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஒரே நேரத்தில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 1.26% இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
பஞ்சாபில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் கிறிஸ்தவர்களுக்கு சீட்டு ஒதுக்குவது அரிதாக மட்டுமே நிகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பஞ்சாப் சட்ட சபையில் ஒரு கிறிஸ்தவ எம்.எல்.ஏ கூட இல்லை.மாநிலத்தில் உள்ள பல கிறிஸ்தவ தலைவர்கள் வரும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அறிக்கையின்படி, பஞ்சாபில் உள்ள கிறிஸ்தவர்கள் மூன்று வகைகளாக உள்ளனர். முதலாவதாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் முன்னோர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள். இரண்டாவதாக, பல்வேறு தேராக்களின் தாக்கத்தில் இருப்பவர்கள்.
அவர்கள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் படிப்பறிவற்றவர்கள். அடுத்து கிறிஸ்துவ மதத்தை கடைபிடிக்கும் தலித்துகளின் வர்க்கம் வருகிறது. இந்த மக்கள் முறையாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் மதத்தை பின்பற்றுகிறார்கள்.