Kathir News
Begin typing your search above and press return to search.

பல்கலைக்கழகத்தின் அடிப்படைக் கடமை இதுதான்: குடியரசுத் தலைவர் கூறியது எதை?

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று கௌரவித்தார்.

பல்கலைக்கழகத்தின் அடிப்படைக் கடமை இதுதான்: குடியரசுத் தலைவர் கூறியது எதை?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Feb 2023 1:29 AM GMT

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லக்னோவில் உள்ள பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். பட்டமளிப்பு உரை நிகழத்திய குடியரசுத் தலைவர், இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும், குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் இந்த சூழல் அமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தங்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் முயற்சிகள் இந்தியாவை புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக மாற்றுவதில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்று கூறினார்.


உத்தரப்பிரதேசத்தின் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2023 மூலம் முதலீடு மற்றும் வணிகத்திற்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறிய குடியரசுத் தலைவர், கல்வியை இந்த சாதகமான சூழலுடன் இணைக்குமாறு வலியுறுத்தினார். நமது பல்கலைக்கழகங்கள் மக்கள் நலனுக்காக புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் மையமாகவும், நான்காவது தொழில் புரட்சியின் மையமாகவும், ஸ்டார்ட் அப்களுக்கான தொழில் பாதுகாப்பு மையமாகவும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நமது கல்வி நிறுவனங்களும் புதிய புரட்சி, சமூக முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தின் தூதுவர்களாக மாறினால் அது மகிழ்ச்சிகரமான சூழலாக உருவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.


பாபாசாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், ஏழை, எளிய மக்களுக்குக் கல்வி அளிப்பது பல்கலைக் கழகத்தின் அடிப்படைக் கடமை என்று நம்பியதாக குடியரசுத் தலைவர் கூறினார். ஒரு கல்வி நிறுவனம் பாரபட்சமின்றி அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும். பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாராட்டத்தக்க பணிகளைச் செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பல்கலைக்கழகம் பாபா சாஹேப்பின் கொள்கைகளின்படி, நாட்டிலும் மாநிலத்திலும் கல்வியை தொடர்ந்து பரப்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News