Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.. மத்திய அரசு எச்சரிக்கை.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இன்னும் முடிவுக்கு வராததால் மக்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.. மத்திய அரசு எச்சரிக்கை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  3 July 2021 1:08 PM IST

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இன்னும் முடிவுக்கு வராததால் மக்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி மத்திய அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த மாதம் 21ம் தேதி முதல் நாடு முழுதும் தினமும் 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.





நார்வே நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது. இதுவரை 34 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகைக்கு சமமானது. மேலும், 80 சதவீத மருத்துவ பணியாளர்கள் 90 சதவீத முன்களப் பணியாளர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.





அதே சமயம் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை முடிவுக்கு வரவில்லை. எனவே சுய கட்டுப்பாடுகளை மக்கள் தளர்த்திக் கொள்ளக் கூடாது. அதே நேரத்தில் தடுப்பூசி அனைவரும் காலத்தாமதம் இன்றி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News