Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த முதல் நபருக்கு மீண்டும் கொரோனா உறுதி.!

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சீனா வூகான் மாகாணத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அப்போது அவருக்கு முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த முதல் நபருக்கு மீண்டும் கொரோனா உறுதி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2021 8:03 AM IST

இந்தியாவில் முதன் முதலாக கொரோனா பாதித்த கேரளா பெண்ணுக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் சீனா வூகான் மாகாணத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அப்போது அவருக்கு முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு லட்சங்களை கடந்து கொரோனா தொற்று பதிவானது.


இந்நிலையில், கேரளா மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கேரளாவில் கொரோனா பாதித்த ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News