லண்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா.. சக பயணிகளை தேடும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.!
லண்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா.. சக பயணிகளை தேடும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.!

By : Kathir Webdesk
பிரிட்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் ரயிலில் பயணித்தவர்களிடம் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் உள்ள தமது கணவரை சந்தித்து விட்டு விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்து தப்பி, ஏபி எக்ஸ்பிரஸ் மூலம் ஆந்திராவுக்கு சென்றடைந்தார். அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த ஆந்திர சுகாதார துறையினர், அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்து, அவருடைய குடும்பத்தாருடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர்.

மேலும், அந்த பெண் பயணம் செய்த ரயில் பெட்டியில் யார் யாரெல்லாம் உடன் பயணித்தனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
