இந்தியாவில் 50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 ஆயிரத்து 148 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா எண்ணிக்கை 3,02,79,331 ஆக உயர்ந்துதுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தினசரி பாதிப்புகளாக 4 லட்சத்தை தாண்டியது. இதனால் பொதுமுடக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக தொற்றின் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46 ஆயிரத்து 148 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா எண்ணிக்கை 3,02,79,331 ஆக உயர்ந்துதுள்ளது.
அதே போன்று 979 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,96,730 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து 58,578 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 2,93,09,607 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 32,36,63,297 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.