Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நோயாளிகள் பட்டியல் வெளியீடு.. 8வது இடத்தில் தமிழகம்.!

கொரோனா நோயாளிகள் பட்டியல் வெளியீடு.. 8வது இடத்தில் தமிழகம்.!

கொரோனா நோயாளிகள் பட்டியல் வெளியீடு.. 8வது இடத்தில் தமிழகம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2020 7:30 PM GMT

ஒட்டு மொத்த நாடுகளுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டாலும் நோயின் தாக்கம் குறைந்த பாடில்லை.

சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களிடம் செலுத்தும் சூழல் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மற்ற நாடுகள் எப்படி கொரோனாவிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வது என கைகளைப் பிசைந்துகொண்டு திணறிகின்றனர்.

இந்தியாவும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,32,002-ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 26,382 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 33,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்திய மாநிலங்களில் தினசரி கொரோனா அப்டேட் பட்டியலில் புதிய நோயாளிகள் அதிகரிப்பில் தமிழ்நாடு 8ம் இடத்தில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News