கொரோனா பவுடர் மருந்து.. தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்டிங்.!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் விதமாக டி.ஆர்.டி.ஓ புதியதாக பவுடர் வடிவிலான ‘2டிஜி’ மருந்தை இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த விஷயம் தற்போது தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் விதமாக டி.ஆர்.டி.ஓ புதியதாக பவுடர் வடிவிலான '2டிஜி' மருந்தை இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த விஷயம் தற்போது தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.
இதனிடையே தடுப்பூசி ஒருபுறம் செலுத்தினாலும், இந்நோய் தொற்று ஏற்பட்டு மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 2டிஜி எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்தது.
இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த பவுடர் மருந்தை தண்ணீரில் கலந்து குடித்தால், வைரஸ் தொற்று அழிக்கப்படும். உடல் உறுப்புகளின் பாகங்கள் மீண்டும் செயல்பட துவங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மருந்தை உட்கொள்வதால், ஆக்சிஜன் தேவையும் குறையும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், '2டிஜி மருந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதனை வரவேற்று ட்விட்டர் பக்கத்தில், #2-DG, #Anti-COVID என்ற ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
