தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் 3வது அலை ஆபத்தை உண்டாக்கும்: இந்தியாவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் 3வது அலை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By : Thangavelu
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் 3வது அலை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையை வெற்றிகரமாக கையாண்டது மத்திய அரசு. அப்போது முதல் அலையில் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளே மிகப்பெரிய பேராபத்தை சந்தித்தது. ஆனால் இந்தியாவில் குறைந்த பாதிப்புடன் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
இதனிடையே இந்தியாவில் 2வது அலை தற்போது தொடங்கி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. பல லட்சம் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 3வது அலை குறித்த எச்சரிக்கை மற்றும் சமிக்ஞைகளும் வந்தவண்ணமாக உள்ளன. இது குறித்து எம.வித்யாசாகர் (சூத்ரா மாதிரி விஞ்ஞானி) கூறியதாவது: நோய் எதிர்ப்பு பொருள் குறைகின்றபோது, நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்கா விட்டாலும், கொரோனா கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்றாவிட்டாலும் இன்னும் 6 முதல் 8 மாதங்களில் 3-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எதிர்கால கணிப்புக்காக எங்கள் மாதிரியில் நோய் எதிர்ப்புசக்தி மற்றும் தடுப்பூசி அம்சங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
