Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பூசி வீடியோ! உண்மை நிலவரம் என்ன? வெளியான தகவல் இதுதான்!

கொரோனா தடுப்பூசி வீடியோ! உண்மை நிலவரம் என்ன? வெளியான தகவல் இதுதான்!

கொரோனா தடுப்பூசி வீடியோ! உண்மை நிலவரம் என்ன? வெளியான தகவல் இதுதான்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jan 2021 11:18 AM GMT

கடந்த சில நாட்களாக இரண்டு மருத்துவர்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டக்கொள்வது போன்று ஏமாற்றினார்கள் என்ற வீடியோ சமூக வலைதளம் மட்டுமின்றி அதனை சில காட்சி ஊடகங்களும் வெளியிட்டது. இந்த தகவலை அனைவரும் உண்மை என்று நம்பி அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.

ஆனால் உண்மை நிலவரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த ஜன., 16ம் தேதி பெண் மருத்துவர் மற்றும் ஒரு ஆண் மருத்துவர் கோவேக்சின் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.

அந்த தடுப்பூசியை போடும்போது பத்திரிகையாளர்கள் இல்லாததால் படம் எடுக்கவில்லை. அப்போது செய்தியாளர்கள் மீணடும் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்று போஸ் கொடுங்கள் என கூறியுள்ளனர்.

இதனை அங்கிருந்த ஒரு செய்தியாளர் வீடியோ எடுத்துள்ளார். அதனை சமூக வலைதளம் மற்றும நண்பர்கள் வட்டாரத்தில் பகிரிந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளம் மட்டுமின்றி காட்சி ஊடகங்களும் அந்த தகவலை உண்மை என்று வெளியிட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி மருத்துவர்களே தடுப்பூசியை போடாமல் ஏமாற்றுக்கிறார்களே என்று மக்கள் மனதில் மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், இந்த நிகழ்வை தொடர்ந்து தும்கூர் மாவட்டத்தில், துணை கமிஷனர் டாக்டர் ராகேஷ் சர்மா விசாரணை நடத்தினார். அப்போது வீடியோவில் பார்த்த இரண்டு மருத்துவர்களும் முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என கூறியுள்ளார். இந்த காட்சியை செய்தியாளர் தவறாக படம் பிடித்து அதனை அனுப்பி விட்டார் என அவர் தெரிவித்தார்.

மேலும், உண்மை நிலவரம் தெரியாமல் இது போன்று மருத்துவர்கள் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என அவர் செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த வீடியோவை அனைவரும் உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள், இனிமேல் உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு பதிவிடுவது நல்லது என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News