Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பூசி: 10 மாதம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.. எய்ம்ஸ் இயக்குநர் தகவல்.!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தகவல் தெரிவித்துள்ளார்.

By : Thangavelu
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரந்தீப் குலேரியா பேசும்போது: நமது நாட்டில் போடக்கூடிய கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.
எனவே இதனை போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், தடுப்பூசிகள் உற்பத்தி திறனை கருத்தில் கொண்டே வயது வாரியாகவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளிலும் வயது வாரியான தடுப்பூசி போடும் பணியைத்தான் செயல்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்வதால்தான் 2ம் அலை பரவத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story